திருஆவினன்குடியில் கலாகர்ஷன பூஜை
பழநி: பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் அர்த்தமண்டவ கதவில் வெள்ளித் தகடுகள் பதிக்க கலாகர்ஷன பூஜை நடைபெற்றது. திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயில் அர்த்தமண்டப நுழைவுவாயிலில் இரட்டை மரக்கதவு, நிலை வாசலில் வெள்ளித்தகடுகள் பல ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்டு இருந்தன. அவை சேதமடைந்துள்ளதால் வெள்ளி தகடுகள் புனரமைக்கும் பணி துவங்க நேற்று (அக். 9) இரவு 7:00 மணிக்கு கலாகர்ஷன பூஜை, வாஸ்து பூஜை நடைபெற்றது. வெள்ளி தகடுகள் பதிக்கும் பணிகள் நிறைவு பெற்ற பின் அக். 12 காலை 6:00 மணிக்கு புணராவாஹனம் செய்யப்பட உள்ளது. இதை முன்னிட்டு அன்று அதிகாலை 4:00 மணிக்கு விளான பூஜை நடைபெறுகிறது.