உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காமராஜர் பிறந்த நாள் விழா..

காமராஜர் பிறந்த நாள் விழா..

திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி,கல்லுாரிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் காமராஜர் பிறந்த தின விழா கொண்டாட்டப்பட்டது.திண்டுக்கல்லில் டாக்டர் ஜாகீர் உசேன் நினைவு சிறுபான்மையினர் அரசுநிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் ஜாகீர் உசைன், முன்னாள் தாளாளர் அப்துல்முத்தலீப், அரபி ஆசிரியர் அஜூரத் மு, முகம்மது அமீர், தலைமை ஆசிரியை வர்ஷினி, பேகம்சாஹிபாநகரத்தில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியை பாத்திமாமேரி, அசனாத்புரத்தில் செயல்படும் தொடக்கப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நிகராபானு, பொறுப்பு தலைமை ஆசிரியை அம்பிகாதேவி முன்னிலை வகித்தார்.நி.பஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் ஆனந்த் கார்த்திக் தலைமையில் மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. ஆசிரியர் மகேஸ்வரன் ஏற்பாடுகளை செய்தார்.*திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் அருணகிரி முன்னிலை வகித்தார்., பொதுச்செயலர் காளிதாஸ் வரவேற்றார். தமிழக ஐக்கிய ஜனதா மாநில செயலர் சுந்தர்ஈசன் பேசினார். ஒருங்கிணைப்பாளர் நவரத்தினம் நன்றி கூறினார். வைரவேல் ஏற்பாடுகளை செய்தார்.இராமராஜபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இரண்டு ஆண்டுகளில் 10ம் வகுப்பு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு முன்னால் ஊராட்சி தலைவர்கள் தர்மராஜன், கவிதா தர்மராஜன் பரிசு வழங்கினார்.வத்தலக்குண்டு : வெற்றிலை நகர் லயன்ஸ் சங்கம் சார்பில் கிட்ஸ் பார்க் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. சங்க தலைவர் செல்வகணேஷ் தலைமை வகித்தார். செயலாளர் லட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் இந்திரஜித் வரவேற்றார். மாணவர்களுக்கு டிக்ஸ்னரிகள் வழங்கப்பட்டன. அமிர்தவர்ஷினி இசை, நடன கலைச்சங்க தலைவர் வெங்கடேஸ்வரன், லயன்ஸ் வட்டாரத் தலைவர் மனோதீபன், பொருளாளர் ராஜேஷ் பங்கேற்றனர். சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதல்வர் நாகரத்தினம் தலைமை வகித்தார். மேலாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார். கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.வேடசந்துார் :வேடசந்துார் விருதலைப்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 79 மாணவர்கள் ஒன்றாக இணைந்து 79 அசோக சக்கரங்களை வட்ட வடிவில் வரைந்தனர். ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மூலம் செ.வெங்கடேசன் தலைமையில் சாதனை நிகழ்வுகளுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகாலட்சுமி, கல்வியாளர் துரை நமச்சிவாயம், தன்னார்வலர் ரம்யா பங்கேற்றனர்.ஆத்து மேட்டில் த.மா.கா., சார்பில் முன்னாள் முதல்வர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.நகரத் தலைவர் நேரு மாணிக்கம் முன்னிலை வகித்தார். காமராஜரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.மாவட்ட பொது செயலாளர் முனியப்பன், வட்டாரத் தலைவர் நாகராஜ், நத்தம் நகர தலைவர் நாசர், நிர்வாகிகள் செந்தில், காந்தி பங்கேற்றனர்.குஜிலியம்பாறை பஸ் ஸ்டாண்டில் உள்ள காமராஜர் சிலைக்கு பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சோமுராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். காங்., வட்டார தலைவர் தர்மர் ,இளைஞர் காங்., தொகுதி துணைத் தலைவர்கள் பிரகாஷ், மோகன் பங்கேற்றனர்.வத்தலக்குண்டு : அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் போல் வேஷ்டி, சட்டை, துண்டு அணிந்து மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். முதல்வர் பால்ராஜ் தலைமை வகித்தார். பாதிரியார் எட்வர்ட் துவக்கி வைத்தார். மாணவர்கள் காமராஜர் என்ற எழுத்து வடிவத்தில் நின்றனர்.தாண்டிக்குடி : காங்., சார்பில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் அரசு ஆரம்ப பள்ளி ,உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு நோட், புத்தகங்கள் வழங்கப்பட்டன.ஒட்டன்சத்திரம் : சக்தி மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் தமிழ் துறை இளந்தலை இலக்கிய மன்றம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி தாளாளர் வேம்பணன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் தேன்மொழி முன்னிலை வகித்தார். கம்பன் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லுாரி உதவி பேராசிரியர் தமிழ்ச்செல்வி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை