மேலும் செய்திகள்
திரு/இன்றைய நிகழ்ச்சி
05-Dec-2024
பழநி:பழநி முருகன் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது.இக் கோயிலில் நேற்று மாலை சாயரட்சை பூஜையை தொடர்ந்து விநாயகர், மூலவர், சின்னகுமாரசுவாமி, சண்முகர், வள்ளி, தெய்வானை துவாரபாலகர்களுக்கு கார்த்திகை தீபத்திருவிழா காப்பு கட்டப்பட்டு சண்முகார்ச்சனை, தீபாராதனை நடந்தது. டிச.13 வரை நடக்கும்.விழாவில் சிறப்பு பூஜை, சின்ன குமாரசுவாமி தங்கச் சப்பரத்தில் எழுந்தருளல், யாகசாலை நடைபெறுகிறது.முக்கிய நிகழ்ச்சியான டிச.13ல் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், மதியம் 2:00 மணிக்கு சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை, மாலை 4:00 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்கிறது.4:45 மணிக்கு சின்னகுமார சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருள்கிறார். யாகசாலை தீபாராதனையை தொடர்ந்து கோயிலில் நான்கு மூலைகளில் தீபம் ஏற்ற 6:00 மணிக்கு கார்த்திகை தீபம், சொக்கப்பனை ஏற்றுதல் நடக்கிறது. அன்று இரவு 7:30 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறாது . தீபதிருநாளன்று பக்தர்கள் யானை பாதை வழியாக கோயில் சென்று படிப்பாதை வழியாக கீழ் இறங்கி வரும் வகையில் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
05-Dec-2024