மேலும் செய்திகள்
கோயில்களில் குருப்பெயர்ச்சி விழா
12-May-2025
பழநி: பழநி முருகன் கோயிலில் வைகாசி மாத கார்த்திகை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை, ஆறு கால பூஜை நடைபெற்றது. உள்ளூர், வெளியூர், வெளி மாநில பக்தர்கள் படிப்பாதை, ரோப்கார், வின்ச் மூலம் கோயில் சென்றனர். ரோப்கார், வின்சில் நீண்ட நேரம் காத்திருந்தனர். குத்து விளக்கு பூஜை திருக்கல்யாண மண்டபத்தில் நடந்தது. சாயரட்சை பூஜைக்கு பின் தங்கமயில் வாகனத்தில் சின்ன குமாரசுவாமி புறப்பாடு நடந்தது. வெளி பிரகாரத்தில் தங்கரத புறப்பாட்டில் சின்னகுமாரசுவாமி எழுந்தருளினார். கார்த்திகை விரதம் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிந்தனர். திருஆவினன்குடி கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி மாத கார்த்திகை விழா நடந்தது. இதையொட்டி முருக பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்ய 16 வகையான சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.சர்வ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து கோயிலை சுற்றி சுவாமி புறப்பாடு நடந்தது. சுற்று வட்டாரம், வெளி மாவட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி முருகப் பெருமானை தரிசனம் செய்தனர். காமாட்சி மவுன குருசாமி மடத்திலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடுசெய்தனர். நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தண்டபாணி சன்னதி, குட்டூர் உண்ணாமுலை அம்பாள் கோயிலில் உள்ள முருகப்பெருமான் சன்னதிகளிலும் கார்த்திகையை யொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.சின்னாளபட்டி: சதுர்முக முருகன் கோயிலில் கிருத்திகை விழா நடந்தது. மூலவர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர், சதுர்முக முருகனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. சிவசுப்பிரமணியருக்கு, வெள்ளி கவசம், ராஜ அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. தோணிமலை முருகன் கோயிலில் கிருத்திகை சிறப்பு அபிஷேகம் நடந்தது.
12-May-2025