கொடையில் குவிந்த கேரள பயணிகள்
கொடைக்கானல்: கொடைக்கானலில் கேரள மாநில பயணிகள் வருகை அதிகரித்திருந்தது. சுற்றுலா தலமான கொடைக்கானலில் ஆப் சீசன் நிலவுகிறது. இதையடுத்து தமிழகம்,வட மாநில பயணிகள் வருகை குறைவாக உள்ளது. சில நாட்களாக கேரளாவை சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள்,பயணிகள் வருகை அதிகரித்துள்ளது இவர்கள் இங்குள்ள பிரையன்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ்வாக், வனச் சுற்றுலா தலங்கள், மேல்மலை பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை ரசித்தனர். ஏரியில் படகு, ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர்.