மேலும் செய்திகள்
கொடையில் முன்கூட்டியே துவங்கிய நீர் பனி தாக்கம்
05-Nov-2025
திருஆவினன்குடி கோயிலில் டிச.8ல் கும்பாபிஷேகம்
05-Nov-2025
வலசுப்பட்டி கோயில் கும்பாபிஷேகம்
05-Nov-2025
இரட்டை பதிவு வாக்காளர்கள் 12,213
05-Nov-2025
திண்டுக்கல் திருச்சி ரோட்டிலுள்ள டி.என்.யூ. கே.கே.அய்யநாடார் கங்காமித்ரம்மாள் மெட்ரிக் வளர் கே.கே.ஜி., பள்ளியானது நடுநிலை தரத்திலிருந்து உயர்நிலை பள்ளியாக வளர்ச்சி அடைந்துள்ளது. இதையொட்டி கூடுதல் உற்சாகமாக மாணவர்களுக்கான பட்டமளிப்பு, விருது, ஆண்டு விழா என முப்பெரும் விழாவை ஒட்டுமொத்த பள்ளியும் ஏகத்துக்கும் கொண்டாடி தீர்த்தனர். கல்வியின் உழைப்பில் உருவான மாணவ சாதனையை உருவாக்கிய இடத்திலயே அறுவடை செய்து காண்பதற்கான பள்ளியின் தரம் உயர்வில் ஆசிரியர்களின் தியாக மனபோக்கானது விழாவில்பிரதிபலித்தது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற பழமொழியை உடைத்து முதல் ஆக்கம் முற்றிலும் ஊக்கம் என்பதற்கிணங்க மாணவர்கள் கற்று தேர்ந்ததை கலை வடிவமாக்கி மேடையில் களமிறக்கியது பள்ளி நிர்வாகம் . கே.ஜி., மாணவர்களான குழந்தைகளே வழங்கிய இந்த நிகழ்ச்சிகள் பார்வையாளர்களுக்கு பிரமிப்போடு தன்னம்பிக்கையையும் ஊட்டியது. வண்ண ஒளியில் கலை சிகரங்களாய் மாறிய மழலைகள் இசை ஒலிக்கேற்ப அழகிய அசைவுகளை பூம், பூம்நடனமாக்கி பார்வைக்கு விருந்து படைத்தனர். மாணவர்களின் வெற்றியை தங்கள் வெற்றியாக நினைக்கும் ஆசிரியர்களின் தியாக உள்ளம் இருக்கும் வரை சாதாரண கல்லும் சிலையாகும் என்ற தத்துவத்தில் பெரும்பாலான மாணவர்கள் மேடையில் தோன்றினர். விழா நிறைவில் மாணவர்களுக்கான விருதை வழங்கியபோது அதை தாங்கி பிடிக்க முடியாமல் திணறும் மழலை மாணவர்களை அவர்களின் சாதனை நிமிர்த்தி நடத்தியதில் பார்வையாளர்களின் கரகோஷம் அடங்க வெகுநேரம் பிடித்தது. சாதனை கம்பளமிட்டு காத்திருக்கும்
பாலன், பள்ளி தாளாளர்: நட்டதும் பலன் கிடைக்கும் பயிர்கள் உலகில் இல்லை. அந்த அபூர்வமானது மனித இனத்தில் மட்டுமே அரங்கேறும் என்பதற்கான சான்றாக இந்த விழா அமைந்துள்ளது. எத்தனை சிறிய மழலைகள் எத்தனை பெரிய சமூக மாற்றங்களை உள்ளடக்கி நிகழ்ச்சிகளை வழங்குகின்றனர் என்பதை பள்ளியின் நிர்வாகியாக இருந்து பூரிப்படைந்தேன். இனிவரும் காலமானது இந்த மாணவர்களுக்கு சாதனைகள் கம்பளமிட்டு காத்திருக்கும் என்பதில் மட்டும் ஐயமில்லை. புவி புலம்பும் நிகழ்ச்சி அபாரம்
சரளா கண்ணன், நிர்வாக பங்குதாரர் ,ராதா டிராவல்ஸ்: ஏட்டு கல்வி அனுபவத்திற்கு உகந்ததில்லை என்ற கூற்றை பொய்யாக்கி உள்ளது இந்த விழா. சூரியனை சுற்றி வரும் ஒன்பது கோல்கள் பேசிக்கொண்டால் என்ற மழலை பட்டாளங்களின் புதுமை நிகழ்ச்சி இதுவரை யாரும் சிந்திக்காத களமாகும். வெப்பமயமாதல், மரம் வளர்ப்பு, பாலிதீன் ஒழிப்பு என புவி புலம்பும் நிகழ்ச்சியை மாணவர்கள் ஏற்பாட்டில் கண்டு ஒட்டுமொத்த பெற்றோர்களும் பாராட்டினர். இந்த சிறப்பு நிகழ்ச்சியானது ஒரு மாணவரின் சிந்தனை என்பது இன்னுமோர் கூடுதல் சிறப்பாகும். ஆசிரியர்களையே பிரமிக்க செய்தது
ராஜசேகர், ராஜ் பால் சேர்மன்: எம்பள்ளியின் 4வது பட்டமளிப்பு விழாவின் நாயகர்களாக கே.ஜி. மாணவர்கள் நிகழ்ச்சியை வழங்கியதுமழலைகளை நேசிக்கும் மனிதர்களை மிகவும் கவர்ந்துள்ளது. நிகழ்ச்சிகள் முடியும் வரை பார்வையாளர்கள் எவரும் இருக்கையை விட்டு எழாமல் குழந்தைகளின் மழலை பேச்சுக்களை ரசித்ததே இந்த விழாவின் வெற்றியாக உணர்கிறோம். கற்பித்ததை விடவும் கூடுதலாகவே கே.ஜி., வகுப்பு மாணவர்களின் மேடை செயல்பாடுகள் ஆசிரியர்களையே பிரமிக்க செய்தது. இந்த மாணவர்களுக்கான திறன்வகுப்பில் ஆசிரியர்களுக்கு இன்னும் ஆர்வத்தை துாண்டி இருக்கும். வல்லரசு இந்தியாவின் அறிகுறிகள்
வைலட் சாந்தி, முதல்வர்: கே.கே.ஜி.மெட்ரிக் பள்ளியின் இந்த விழாவானது மழலைகளின் தனிச்சிறப்பை வெளிக்கொணர்ந்த விழாவாகவே வியப்பை ஏற்படுத்தியது. நடனமல்லாது சிற்றிலக்கியம், தமிழ்நுால் நன்னெறி கதைகளை தழுவிய மேடை சொற்பொழிவு என சாதிக்கும் உயரத்திற்கும், மாணவர்களின் வயதிற்கும் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்ததே எதிர்கால வல்லரசு இந்தியாவின் அறிகுறியாக தெரிந்தது. பள்ளியால் பெற்றோர்களுக்கும் பெருமை
ரங்கவேல், தாளாளர் :கே.ஜி., முதல்வகுப்பு பயிலும் மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பதை காண ஆவலுடன் வந்தோம். அவர்களது திறமைகளை ஆய்வு செய்து அதற்கேற்ப மேடைக்களம் ஏற்றுவதிலான பள்ளியின் செயல் பெற்றோரின் வளர்ப்பிற்கு ஈடாகியுள்ளது. இந்த பள்ளியின் இந்த ஆண்டு விழா நிகழ்வு ஒன்றே மாணவர்களின் தனிச்சிறப்பை விளக்கும் கலைகளின் சங்கமாமாகி உள்ளது. பள்ளியால் பெற்றோர்களுக்கும் பெருமை என அகமகிழ்வு ஏற்பட்டதை பலரின் முகத்தில் கண்டோம்.
05-Nov-2025
05-Nov-2025
05-Nov-2025
05-Nov-2025