உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / துர்நாற்றத்தால் சுகாதாரக்கேடு, எரியாத விளக்கால் அவதி: கொடைக்கானல் 19 வார்டின் அவலம்

துர்நாற்றத்தால் சுகாதாரக்கேடு, எரியாத விளக்கால் அவதி: கொடைக்கானல் 19 வார்டின் அவலம்

கொடைக்கானல்: கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தால் துர்நாற்றம், எரியாத தெரு விளக்கால் அவதி என பல்வேறு பிரச்னைகளால் சிரமத்தில் கொடைக்கானல் 19 வது வார்டு மக்கள் உள்ளனர். கொடைக்கானல் நகரின் நுழைவாயில் பகுதியில் உள்ளது 19 வார்டு. இதில் அண்ணா நகர் 4 வது தெரு, கல்லறைமேடு, லாஸ்காட் ரோடு பகுதிகள் உள்ளன. பட்டா இல்லாத அவலம், காட்டுமாடு, தெரு நாய்களால் குடியிருப்புவாசிகளுக்கு அச்சுறுத்தல், குடிநீர் பிரச்னை, தூர்வாரப்படாத சாக்கடை, கழிவுநீர் சுத்திகரிப்பால் துர்நாற்றம், எரியாத தெருவிளக்கு என ஏராளமான பிரச்னைகள் உள்ளன. துர்நாற்றம் வீசுகிறது இன்பராஜ், வணிகர், கொடைக்கானல் நகர் : வார்டில் சுற்றித் திரியும் காட்டுமாடு மற்றும் தெரு நாய்களால் குடியிருப்பு வாசிகள் அச்சத்தில் வசிக்கும் நிலை உள்ளது. குடிநீர் சரிவர வராத நிலையில் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கல்லறைமேட்டில் உள்ள தனியார் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் சரிவர பராமரிக்காத நிலையில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இப்பகுதியில் வசிபபோர்க்கு மூச்சுத்திணறல் மற்றும் சுவாச கோளாறு பிரச்னையால் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து நகராட்சியில் புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. வார்டில் பெரும்பாலான வீடுகளுக்கு பட்டா இல்லாத நிலை உள்ளது. குடிநீர் சப்பை இல்லை முனியாண்டின், பெயிண்டர், லாஸ்காட் ரோடு : வார்டில் வசிப்பவர்களில் சிலர் செப்டிக் டேங்க் அமைக்காமல் இரவில் திறந்தவெளி சாக்கடையில் மனித கழிவுகளை திறந்து விடுவதால் துர்நாற்றமும், சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் சப்ளையின்றி அவதிப்படுகிறோம். தெரு பெயர் குறித்த அறிவிப்பு பலகை இல்லாத நிலை உள்ளது. 4வது தெருவில் உள்ள பழைய கிணறு பராமரிப்பின்றி புதர் மண்டி பயனற்றுள்ளது. சமுதாயக்கூடம் சேதமுற்றுள்ளது. தெரு விளக்கு எரியாததால் பொதுமக்கள் தடுமாறுகின்றனர். லாஸ்காட் ரோட்டில் தூர்வாரப்படாத சாக்கடையால் கழிவுநீர் ரோட்டில் செல்கிறது. அரசு மேல்நிலைப் பள்ளி பகுதியில் காலை, மாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும். நடவடிக்கை எடுக்கப்படும் சித்ரா, கவுன்சிலர் (திமுக): வார்டில் இதுவரை ரூ. 65 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் நடந்துள்ளன. கழிவுநீர் சுத்திகரிப்பிலிருந்து வெளியாகும் துர்நாற்றம் குறித்து நகராட்சில் புகார் மற்றும் மனு அளித்துள்ளேன் நடவடிக்கை இல்லை. பழநி எம்.எல்.ஏ.,விடம் கூறி இதற்கு தீர்வு ஏற்படுத்த உள்ளேன். தெருவிளக்கு அடிக்கடி எரியாத நிலை பற்றி புகார் அளித்து சரி செய்யப்பட்டு வருகிறது. சாக்கடை துப்புறவுப் பணியாளர்கள் மூலம் தூர்வாரப்பட்டு வருகிறது. தெரு நாய் மற்றும் ரோட்டில் நடமாடும் கால்நடைகளை கட்டுப்படுத்தப்படும். போதிய மழையின்றி நகராட்சி நீர் தேக்கத்தில் தண்ணீர் குறைவாக உள்ளது. மழை பெய்தால் நிலைமை சீராகும். வார்டில் உள்ள பழைய கிணறு தொடர்ந்து தூய்மைப்படுத்தப்படுகிறது. இருந்தப் போதும் குப்பை குவிந்து இது போன்ற நிலை நீடிப்பதை தவிர்க்க மேல் மூடி அமைந்து இதன் மூலம் குடிநீர் தொட்டி அமைத்து தண்ணீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். திறந்த வெளி சாக்கடையில் மனித கழிவுகள் விடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி