உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாரத்தான் மாணவிகளுக்கு பாராட்டு

மாரத்தான் மாணவிகளுக்கு பாராட்டு

வேடசந்துார் : வத்தலகுண்டு பி.வி.பி., கலை அறிவியல் கல்லுாரியில் இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள்,பொதுமக்கள் பங்கேற்ற ஆண்களுக்கான 10 கிலோமீட்டர் துாரத்திற்கான மாரத்தான் போட்டி, பெண்களுக்கான ஏழு கிலோமீட்டர் துாரத்திற்கான மாரத்தான் போட்டி நடந்தது. 60க்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். கோவிலுார் கே.ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சுவேதா 2ம் பரிசு பெற்றார். இதே பள்ளியைச் சேர்ந்த ரூபிணி 4 வது பரிசு, கோமதி 5 வது பரிசு, ஹரித்வார்தினி 7 வது பரிசு, விஜயலட்சுமி 8வது பரிசு, ஜீவானந்தம் 10வது பரிசை பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், உதவி தலைமை ஆசிரியர் முத்துமீனா, உடற்கல்வி ஆசிரியர் முனியப்பன் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை