உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கற்பக விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்

கற்பக விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்

வடமதுரை: அய்யலுார் முத்துநாயக்கன்பட்டியில் ஸ்ரீ வன்னிமரத்தடி கற்பக விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்றுமுன்தினம் மாலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கிய விழாவில் 2 கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீரூற்ற கும்பாபிஷேகம் நடந்தது. திண்டுக்கல் கார்த்திகேயன் ஷர்மா தலைமையிலான குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். களர்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, கஸ்பா அய்யலுார், கெங்கையூர், குளத்துபட்டி உள்ளிட்ட சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர். ஏற்பாட்டினை முத்துநாயக்கன்பட்டி எஸ்.கருப்பையா பிள்ளை குடும்பத்தினர், விழா குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை