கொல்லப்பட்டி மலை, ராஜாதானிக்கோட்டை கோயில் கும்பாபிஷேகம்
கொடைரோடு: கொடைரோடு அருகே ராஜதானிக்கோட்டை சுயம்பு முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இக் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. நவ.12 காலை மங்கல இசை ,கணபதி ஹோமத்துடன் துவங்கிய இவ்விழாவில் 1ம் கால யாகபூஜைகள் , நவ.13 ல்2ம் , 3ம் கால யாகபூஜை நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்று (நவ.14) காலை 4ம் கால யாகபூஜைகள் நடக்க கும்பங்களில் புனித நீர் ஊற்ற ராஜ விநாயகர், சுயம்பு முத்தாலம்மன், காளியம்மன், பகவதி அம்மன், சிவன், முருகன், ஐயப்பன், கோட்டை கருப்பண சுவாமி, நாகம்மாள் , பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுற்று கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானமும் நடந்தது. ஏற்பாடுகளை ராஜதானிக்கோட்டை ஜமீன்தார்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.