உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தாண்டிக்குடி -- வத்தலக்குண்டு ரோட்டில் மண் சரிவு: விபத்து அபாயத்தில் செல்லும் வாகனங்கள்

தாண்டிக்குடி -- வத்தலக்குண்டு ரோட்டில் மண் சரிவு: விபத்து அபாயத்தில் செல்லும் வாகனங்கள்

தாண்டிக்குடி:தாண்டிக்குடி - வத்தலக்குண்டு ரோட்டில் கனமழையால் ஆங்காங்கே மண் சரிவுகளும், பாறைகளும் சரிந்துள்ளதால் விபத்து அபாயத்தில் வாகனங்கள் செல்கின்றன.திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் சித்தரேவு மலை ரோட்டில் 3க்கு மேற்பட்ட இடங்களில் ஆங்காங்கே பாறைகள் சரிவு, மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மழை நீர் வடிந்து செல்ல வாய்க்கால் வசதியின்றி ரோட்டோரம் அரிப்பு ஏற்பட்டு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள மண்சரிவை அகற்றாத நிலையில் வாகனங்கள் விபத்து அபாயத்தில் சென்று வருகின்றன. தாண்டிக்குடி சித்தரேவு மலை ரோட்டில் ஏற்பட்டுள்ள மண் சரிவுகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ