வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞரை கன்னியக்குறைவாகவும், மிரட்டி, அவமானப்படுத்திய மாஜிஸ்திரேட்டைகண்டித்து திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன், செயலாளர் செல்வராஜ் தலைமையில் வழக்கறிஞர்கள் நீதிமன்றபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறுகையில், நவ.7 வரை தொடர் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதென்றும், இந்த விஷயம் தொடர்பாக மாவட்ட நீதிபதியை சந்திக்கவும், நடவடிக்கைகளுக்கு குழுவும் அமைத்துள்ளோம் என்றனர்.