பாதியாக சரிந்த எலுமிச்சை விலை; விரக்தியில் விவசாயிகள்
ஒட்டன்சத்திரம்: ஆந்திரா எலுமிச்சை வரவால் ஒட்டன்சத்திரத்தில் விலை சரிவடைந்து பாதியாக குறைந்ததால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.ஒட்டன்சத்திரம் ,மலைப்பகுதி கிராமங்களான வடகாடு, கண்ணனுார், கோமாளிபட்டி கிராமங்களில் எலுமிச்சை அதிகமாக விளைவிக்கப்படுகிறது. கோடை காலம் காரணமாக இதன் தேவை அதிகரித்ததால் எலுமிச்சை கிலோ ரூ.80க்கு மேல் விற்பனையானது.இந்நிலையில் தற்போது ஆந்திரா மாநில எலுமிச்சை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.இதனால் விலை பாதியாக சரிவடைந்து கிலோ ரூ.40க்கு விற்பனையானது.இந்த விலையானது செடிகளில் இருந்து எலுமிச்சையை பறித்தெடுக்கும் கூலிக்கு கூட கட்டுபடியாகாது என்பதால் விவசாயிகள் விரக்தி அடைந்து உள்ளனர்.விவசாயி ஒருவர் கூறுகையில் ஆந்திரா வரவு காரணமாக எலுமிச்சை விலை சரிவடைந்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்றார்.