மேலும் செய்திகள்
வால்பாறையில் சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்
18-Jun-2026
பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எதிரே தென்றல் நகர் பகுதியில் இரவு சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வத்தலக்குண்டு வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து வனக்காப்பாளர் கணேசன் தலைமையில் வனத்துறையினர் மிருகங்களின் கால் தடங்களை ஆய்வு செய்தனர். கேமரா மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆனால் சிறுத்தை நடமாட்டத்திற்கு உண்டான அறிகுறி இல்லை. இருப்பினும் தொடர்ந்து கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். வனத்துறை உடனடி நடவடிக்கையின் மூலம் அப்பகுதியினர் நிம்மதி அடைந்தனர்.
18-Jun-2026