மேலும் செய்திகள்
இயந்திர பயன்பாடுகள் இருந்தால் நடவடிக்கை
06-Mar-2025
எதையும் கண்டுக்காது கல்லா கட்டும் அதிகாரிகள்கொடைக்கானல்: கொடைக்கானலில் அனுமதியின்றி இயந்திர பயன்பாடு தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.டி.ஒ., எச்சரிக்கையை மீறியும் இதன் பயன்பாடு தாராளமாக நடக்கிறது. கொடைக்கானல் மலைப்பகுதியில் மலைத் தள பாதுகாப்பின் அடிப்படையில் போர்வெல், கம்ப்ரஷர், மண் அள்ளும் இயந்திரம், பாறை தகர்ப்பு உள்ளிட்டவற்றிற்கு தடை உள்ளது. அவை இன்றளவும் நடைமுறையில் உள்ளது. மலைப்பகுதிகளையும், இயற்கை வளத்தை பாதுகாப்பதிலும் திண்டுக்கல் கலெக்டர் சரவணன் ஆர்வத்துடன் உள்ளார். தற்போது கொடைக்கானல் ஆர்.டி.ஓ., வாக பொறுப்பேற்றுள்ள திருநாவுக்கரசு இயந்திர பயன்பாட்டிற்கு மலைப்பகுதியில் தடை விதித்து கடுமை காட்டினார். மேலும் சம்மந்தமந்தப்பட்ட வி.ஏ.ஒ., ஆர்.ஐ.,க்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் அறிவிப்பு நோட்டீஸ் அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ளது. ஆர்.டி.ஒ., கண்டிப்பை மீறியும் கொடைக்கானலில் இயந்திர பயன்பாடு தாராளமாக நடந்தேறுகின்றன. இயற்கை வளத்திற்கு வேட்டு வைக்கும் இத்தகைய பயன்பாடு வயநாடு சம்பவத்தை பிரதிபலிக்கும் போது தெரிய வரும். வில்பட்டி வி.ஏ.ஒ., அலுவலகம் அருகே தடை செய்யப்பட்ட போர்வெல் இயந்திரம் செயல்பட்டும் வருவாய்த்துறையினர் கண்டு கொள்ளவில்லை என்பது எடுத்துகாட்டாக உள்ளது . ஆர்.டி ஒ., திருநாவுக்கரசு கூறுகையில்'' இயந்திரபயன்பாடு குறித்து நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. இதை மீறியும் தொடர்வதால் மீண்டும் ஆர்.ஐ., வி.ஏ.ஓ., அடங்கிய கூட்டம் நடத்தப்பட்டு மலைப்பகுதியில் உள்ள இயந்திரங்கள் தரையிறக்கப்படும். மேலும் இயந்திர பயன்பாட்டிற்கு கலெக்டர் அனுமதி கட்டாயமாக்கப்பட்டு அனுமதிக்கப்படும் ' என்றார்.
06-Mar-2025