உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மதுரகாளியம்மன் கோயில் விழா

மதுரகாளியம்மன் கோயில் விழா

நத்தம்: கர்ணம் தெரு செல்வவிநாயகர், மதுரகாளியம்மன், பாலமுருகன் கோயில் திருவிழா மே 9- ல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது . மறுநாள் காவல் தெய்வங்களுக்கு பழம் வைத்தல் ,அன்றிரவு அம்மன் குளத்தில் இருந்து சக்திகரகம் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது. பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி, அரண்மனை பொங்கல், முளைப்பாரி எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர். அன்னதானம் நடைபெற்றது.வேலாயுதம்பட்டி மந்தை முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் தீவட்டி பரிவாரங்கள், வானவேடிக்கைகளுடன் முத்தாலம்மன் ஊர்வலமாக மந்தைக்கு அழைத்து வரப்பட்டார். கோயில் சென்ற அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.தொடர்ந்து பக்தர்கள் பால்குடம், அக்கினிசட்டி, மாவிளக்கு, கிடாய்கள் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மாலை வர்ணக் குடைகளுடன் பக்தர்கள் புடைசூழ அம்மன் பூஞ்சோலை சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ