உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முத்துநகர் ரயிலில் மதுபாட்டில்கள் மதுரைக்காரர் கைது

முத்துநகர் ரயிலில் மதுபாட்டில்கள் மதுரைக்காரர் கைது

திண்டுக்கல்:சென்னையிலிருந்து திண்டுக்கல் வழியாக துாத்துக்குடி சென்ற முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெளி மாநில மதுபாட்டில்களை கடத்திய மதுரைக்காரரை போலீசார் கைது செய்தனர்.சென்னையிலிருந்து இந்த ரயில் நேற்று முன்தினம் திருச்சி மாவட்டம் மணப்பாறை வந்த போது திண்டுக்கல் ரயில்வே போலீசார் போதைப்பொருட்கள் கடத்தப்படுகிறதா என சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பேக்கில் மது பாட்டில்கள் இருந்தது தெரிந்தது. அதை கொண்டு வந்த மதுரை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த அண்ணாதுரையை 54, ரயில்வே போலீசார் மது விலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை அவர்கள் கைது செய்தனர்.நேற்று முன்தினம் டில்லி - கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில் 10 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை கடத்தி வந்தவர்கள் போலீசார் வந்ததையறிந்து கழிப்பறை அருகே பொட்டலங்களை போட்டு விட்டு தப்பியதாக போலீசார் தெரிவித்தனர். குட்கா பொருட்களை போலீசார் உணவுப்பாதுகாப்புத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை