மேலும் செய்திகள்
வழக்கறிஞரை தாக்கிய இருவர் கைது
16-Sep-2024
வடமதுரை,:திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே வாலிபர் கொலை வழக்கில் தேடப்பட்டவர் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தபோது கால் முறிந்தது.திண்டுக்கல் காப்பிளியப்பட்டியை சேர்ந்த ஹேமதயாள வர்மனை 32 ,கடனுக்கு ஜாமின் வழங்கியது தொடர்பான முன்விரோதம் காரணமாக செப்.25 ல் பாரைப்பட்டி டாஸ்மாக் பின்புற குளக்கரையில் பகவதி உட்பட 4 பேர் வெட்டிக் கொலை செய்தனர்.இவ்வழக்கில் வினோத்குமார் 28, கவியரசு 24, மாரிமுத்து 29, கைது செய்யப்பட்டனர். தலைமறைவான சக்கிநாயக்கன்பட்டி பகவதி 36, வேலாயுதம்பாளையம் கணவாய்மேடு பாறை பகுதியில் பதுங்கி இருந்தார். அவரை வடமதுரை இன்ஸ்பெக்டர் கண்ணன், எஸ்.ஐ., சித்திக் தலைமையிலான போலீசார் பிடிக்க முயன்ற போது தப்பிய பகவதி பாறையில் இருந்து கீழே குதித்தார்.அப்போது அவரது வலதுகால் முறிந்தது. பகவதியை மீட்டு கைது செய்த போலீசார் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
16-Sep-2024