உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் மாசி திருவிழா துவக்கம்

பழநியில் மாசி திருவிழா துவக்கம்

பழநி:பழநி முருகன் கோயில் உப கோயிலான கிழக்குவீதி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா முகூர்த்தக்கால் நடுதலுடன் நேற்றிரவு 8:05 மணிக்கு துவங்கியது.இந்த திருவிழா துவக்கமாக சண்முக நதியில் தீர்த்தவாரி நடந்தது. பிப்.13 இரவு மாரியம்மன் கோயில் முன் கம்பம் நட, பிப்.,20 மாலை 6:30 மணிக்கு மேல் கொடியேற்றம், பூவோடு வைத்தல் நடக்கிறது.பிப்.21 காலை 9:00 மணிக்கு அடிவாரம் அழகு நாச்சி அம்மன் திருக்கல்யாணம், குமாரசத்திரம் அழகு நாச்சிஅம்மன் திருக்கல்யாணம் நடைபெறும். பிப்.27 இரவு மாரியம்மன் கோயிலில் திருக்கல்யாணம், பிப்.28ல் தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ