மேலும் செய்திகள்
கலையரங்கம் திறப்பு
08-Jun-2025
மது, குட்கா; 2 பேர் கைது
25-May-2025
நத்தம்:திண்டுக்கல் மாவட்டம் சமுத்திராப்பட்டியில் ரியல் எஸ்டேட் அதிபர் அழகப்பன் 47, வீட்டில் புகுந்த ஆறு முகமூடி கொள்ளையர்கள் நகைகள், பணம் இல்லாததால் ஆயுதங்களால் அவரையும், அவரது தாயாரையும் தாக்கி விட்டு தப்பி சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சமுத்திராபட்டியைச் சேர்ந்த அழகப்பன் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவர் சிறுகுடி ரோடு ஊரணிக்கரை வீட்டில் தாயார் சொர்ணத்துடன் 70, வசித்து வருகிறார். நேற்று முன் தினம் நள்ளிரவு இவரது வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டது.அழகப்பன் கதவை திறந்தார். அப்போது முகமூடி அணிந்து வந்த 6 கொள்ளையர்கள் அழகப்பனின் கழுத்தில் கத்தியை வைத்து வீட்டிற்குள் அழைத்து சென்றனர். நகைகள், பணத்தை எங்கு வைத்திருக்கிறாய் என கேட்டு பீரோவை திறக்கும்படி மிரட்டினர்.அழகப்பன் பீரோவை திறக்க நகைகள், பணம் இல்லை.ஆத்திரமுற்ற கொள்ளையர்கள் கத்தியால் அழகப்பனின் கழுத்து, கை, கால்களில் சராமரியாக குத்தினர். வலி தாங்க முடியாமல் அழகப்பன் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு மாடியில் இருந்த தாயார் சொர்ணம் யாராவது காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டார். இதனால் மேலும் ஆத்திரமுற்ற கொள்ளையர்கள் சொர்ணத்தை மாடியில் இருந்து கீழே தரதரவென இழுத்து வந்து அவரையும் தாக்கினர். இதற்கிடையே இவர்களது அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் திரண்டு வர கொள்ளையர்கள் பின்பக்க கதவு வழியாக தப்பி சென்றனர். அவர்களில் ஒருவரை பிடித்த கிராம மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். ஆனால் அந்த நபரும் போலீசாரிடமிருந்து தப்பி சென்றார்.காயமுற்ற அழகப்பன் நத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்.பி., பிரதீப், இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். தப்பிய முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
08-Jun-2025
25-May-2025