உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தொழுநோயை கட்டுப்படுத்த நடவடிக்கை

தொழுநோயை கட்டுப்படுத்த நடவடிக்கை

திண்டுக்கல : திண்டுக்கல் மாவட்டத்தில் தொழுநோயை கட்டுப்படுத்த பள்ளிகள், மார்க்கெட்டுகள், பொது இடங்களில் முகாம்கள் அமைத்து பரிசோதனை செய்வதில் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.ஜன.30லிருந்து 2 வாரத்திற்கு தொழுநோய் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. தொழுநோய் குறித்து மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் அரசு தரப்பில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.இதையொட்டி திண்டுக்கல் மாவட்ட தொழுநோய் மருத்துவ பணிகள் துணை இயக்குநர் ரூபன்ராஜ் தலைமையில் அதிகாரிகள் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் ஸ்டாண்ட், காய்கறி மார்க்கெட்டுகள்,பள்ளிகளில் தொழுநோய் தடுப்பு முகாம்கள் அமைத்து பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.முதல்கட்டமாக 1000க்கு மேலானோருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டது. சிலருக்கு தேமல் போன்ற தோல் பிரச்னைகள் கண்டறியப்பட்டது. அவர்களுக்கு மாத்திரைகள் வழங்கி மீள்வதற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ