மேலும் செய்திகள்
போக்சோவில் மூவர் கைது
01-Aug-2025
பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநியில் மனைவியுடன் பழகிய கூலித்தொழிலாளியை மது அருந்த அழைத்து சென்று கழுத்தை அறுத்து கொலை செய்த மெக்கானிக்கை, நண்பருடன் போலீசார் கைது செய்தனர். பழநி ஜவஹர்நகரைச் சேர்ந்தவர் மெக்கானிக் அஜித்குமார் 29. இவர் மனைவி மேகவர்ஷினியுடன் குபேரபட்டினத்தில் வாடகை வீட்டில் வசித்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நவநீதனுடன் 25, மேகவர்ஷினிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் அஜித்குமார் பழநி ஜவகர் நகருக்கு வீட்டை மாற்றினார். மேலும் நவநீதனையும் அஜித்குமார் கண்டித்துள்ளார். ஆனால் தொடர்ந்து நவநீதன் மேகவர்ஷினியுடன் பழகி வந்துள்ளார். இதையடுத்து நவநீதனை பழநி பெரியப்பா நகரில் உள்ள குப்பை கிடங்கிற்கு மது குடிக்க அழைத்து சென்ற அஜித்குமார் கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தார். அஜித்குமாரை பழநி போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த நண்பர் சுதாகரும் 29, கைது செய்யப்பட்டார்.
01-Aug-2025