உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மருத்துவ மாணவர் உடல் மீட்பு

மருத்துவ மாணவர் உடல் மீட்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் அஞ்சுவீடு அருவியில் தவறி விழுந்து பலியான மருத்துவக்கல்லுாரி மாணவர் உடல் நான்கு நாட்களுக்குபின் நேற்று மீட்கப்பட்டது. கொடைக்கானலுக்கு கோவையைச்சேர்ந்த மருத்துவ கல்லுாரி மாணவர்கள் 11 பேர் அக்.18 ல் சுற்றுலா வந்தனர். பேத்துப்பாறை அருகே உள்ள அஞ்சு வீடு அருவியை பார்க்க சென்ற நிலையில் சிலர் ஆற்றில் குளித்துள்ளனர். பொள்ளாச்சியை சேர்ந்த மாணவர் நந்தகுமார் 21, ஆற்றுப்படுகை பகுதியில் தவறி விழுந்தார். தீயணைப்பு துறையினர் மாயமான அவரை 4 நாளாக தேடினர். கனமழை பெய்த நிலையில் வெள்ளப்பெருக்கிடையே அவரது உடலை மீட்டனர். அபாயகரமான இப்பகுதிக்கு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை