வணிகர் உறுப்பினர் சேர்க்கை
வேடசந்துார்: வேடசந்துார் அனைத்து வர்த்தகர் சங்கம் சார்பில் வணிகர் நல வாரியத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. வர்த்தக சங்கத் தலைவர் சுகுமார் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ராஜா, துணைத்தலைவர் பார்த்தசாரதி, இணைச்செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் சந்திரன் முன்னிலை வகித்தனர்.