வியாபாரிகள் முற்றுகை
சின்னாளபட்டி : சின்னாளபட்டியில் 54 ஆண்டுகள் பழமை வாய்ந்த அண்ணா தினசரி மார்க்கெட் கட்டடம் சில சேதமடைய துவங்கியது. மார்க்கெட் அருகே ஆடு வதைக்கூடம், இறைச்சி, மீன், மண் பானை, சமையல் பாத்திரங்கள் போன்ற விற்பனை நிறுவனங்களும் செயல்பட்டு வந்தன. இதை சீரமைப்பதற்காக பேரூராட்சி நிர்வாகம் 3 பாதைகளையும் மூடியது. மாற்று ஏற்பாடு இல்லாத சூழலில் வியாபாரிகள் இடவசதியின்றி ரோட்டோரங்களில் கடை விரிக்க துவங்கினர். 3 மாதங்களாகியும் கட்டட பணிகள் துவங்காததை கண்டித்து வியாபாரிகள் முற்றுகையிட்டனர். கட்டடம் பணிகள் துரிதப்படுத்தப்படும் என உறுதி அளிக்க கலைந்தனர்.