மேலும் செய்திகள்
ஒர்க் ஷாப்பில் தீ விபத்து 10 கார்கள் கருகி நாசம்
16-Mar-2025
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் நகர் பகுதியில் நவீன தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்ட 250 கேமராக்களின் இயக்கத்தை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்.ஒட்டன்சத்திரம் நகர் பகுதியில் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் பஸ்ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், அனைத்து ரோடுகள், தெருக்களின் சந்திப்புகள் என அனைத்து இடங்களையும் ஒருங்கிணைத்து 30 கி.மீ., துாரத்திற்கு 250 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் கண்காணிப்பு அறை ஒட்டன்சத்திரம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கேமராக்களின் இயக்கத்தை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் ஒட்டன்சத்திரம் பகுதியில் குற்றச் செயல்கள் குறையும். குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க முடியும். கள்ளிமந்தையம், இடையகோட்டை, அம்பிளிக்கை போலீஸ் ஸ்டேஷன்களின் எல்லைக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.எம்.பி., சச்சிதானந்தம், எஸ்.பி., பிரதீப், டி.எஸ்.பி., கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் தங்கராஜ், நகராட்சி தலைவர் திருமலைசாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி கலந்து கொண்டனர்.
16-Mar-2025