விபத்தில் சிக்கியவரை மீட்ட எம்.எல்.ஏ.,
ஆத்தூர்: வக்கம்பட்டி அருகே விபத்தில் சிக்கியவரை அவ்வழியே சென்ற பழநி எம்.எல்.ஏ., செந்தில் குமார் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். தி.மு.க., திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராகவும் உள்ள இவர் நேற்று செம் பட்டிக்கு வந்திருந்தார். திண்டுக்கல் நோக்கி காரில் சென்ற போது மைக்கேல்பாளையத்தைச் சேர்ந்த வியாபாரி ராஜேஷ் 32, வக்கம்பட்டி அருகே டூவீலரில் இருந்து தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி காயங்களுடன் கிடந்தார். இதை கவனித்த எம்.எல்.ஏ., ஆதரவாளர்களுடன் காயமடைந்தவரை மீட்டார். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.