மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு லேப்டாப்
04-Feb-2026
மாணவர்களுக்கு லேப்டாப்
30-Jan-2026
பழநி: பழநி - ஈரோடு ரயில் பாதை திட்டத்துக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் வலியுறுத்தினார். பழநி நகராட்சியில் துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்ட துவக்க விழாவில் எம்.எல்.ஏ., செந்தில் குமார், நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, கமிஷனர் டிட்டோ, தி.மு.க., நகர செயலாளர் வேலுமணி கலந்து கொண்டனர். அப்போது எம்.எல்.ஏ., கூறியதாவது: பழநியில் மாவட்ட அரசு மருத்துவமனை கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக திறக்க பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. காவிரி கூட்டு குடிநீர் திட்டம் 70 சதவீத குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதிகளுக்கு வழங்க பணிகள் நடைபெற்று வருகின்றன. பழநி தனி மாவட்டமாக எதிர்காலத்தில் உருவாக்கப்படும் பழநி- ஈரோடு ரயில் பாதை, பழநி ரோப்கார் திட்ட பணிகளை துவங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலை விரிவாக்கத் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்பதை இங்குள்ள பா.ஜ.,வினர் மத்திய அரசிடம் வலியு றுத்த வேண்டும் என்றார்.
04-Feb-2026
30-Jan-2026