மேலும் செய்திகள்
பழநியில் பக்தர்கள் கூட்டம்
17-Nov-2025
பழநி: பழநி அடிவாரம் பகுதியில் பக்தர்களின் வசதிக்காக தனியார் வங்கி சார்பில் நடமாடும் ஏ.டி.எம்., அமைக்கப்பட்டுள்ளது. பழநி முருகன் கோயிலுக்கு கார்த்திகை மாதம் துவங்கியது முதல் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. இவர்கள் எளிதாக வங்கியில் பணம் பெற்றுக் கொள்ள வசதியாக கோயில் நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் தனியார் வங்கி சார்பில் சில தினங்களுக்கு முன் நடமாடும் ஏ.டி.எம்., அமைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மேலும் பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்த மேலும் ஒரு தனியார் வங்கி மூலம் நேற்று பழநி கிழக்கு கிரி வீதி சுற்றுலா வாகன நிறுத்த வளாக பஞ்சாமிர்த ஸ்டால் அருகே நடமாடும் ஏ.டி.எம்., அமைக்கப்பட்டுள்ளது. இதனை கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து துவக்கி வைத்தார்.
17-Nov-2025