உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் ரத்தசோகையை கண்டறிய நவீன கருவி

திண்டுக்கல்லில் ரத்தசோகையை கண்டறிய நவீன கருவி

திண்டுக்கல்: பழங்குடி மக்களிடையே குழந்தைகளுக்கு செல் ரத்த சோகை, தலசீமியா உள்ளிட்ட ஹீமோகுளோபினோபதிகளை நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தும் நிலையில் இதற்கு சிகிச்சை அளிக்கும் அதிநவீன கருவியான உயர் செயல்திறன் திரவ குரோமடோகிராபி (HPLC)கருவி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மத்திய உயிர்வேதியியல் ஆய்வகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதனை கல்லுாரி முதல்வர் சுகந்தி துவக்கிவைத்தார். தனியாரில்ரூ.1000 செலவாகும் இந்த பரிசோதனையை திண்டுக்கல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக செய்யலாம். இந்தத் திட்டம் பழங்குடியின 10,12ம் வகுப்பு மாணவர்கள், கர்ப்பிணிகளுக்கு பயனளிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ