பழநியில் மாத பிறப்பு பூஜை
பழநி: பழநி முருகன் கோயிலில் வைகாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து கணபதி யாகம் நடைபெற்றது. விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்றது. திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில், லட்சுமி நாராயண பெருமாள், பட்டத்து விநாயகர் கோயில்களிலும் பூஜைகள் நடந்தது.