முருங்கை விலை உயர்வு வெண்டை விலை குறைவு
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில், முருங்கை விலை ஒரே வாரத்தில் கிலோ 17 ரூபாயிலிருந்து, 33 ரூபாயாக உயர்ந்தது.ஒட்டன்சத்திரம் பகுதியில் முருங்கை விளைச்சல் அதிகமாக இருந்ததால், கடந்த வாரம் மார்க்கெட்டில் வரத்து அதிகமாக இருந்தது. இதனால், முருங்கைக்காய் கிலோ 17 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், கோடை மழை காரணமாக, முருங்கை மரங்களில் இருந்த பூக்கள் உதிர்ந்து விட்டன. இதனால் வரத்து குறைந்து, முருங்கை விலை உயர்ந்து, கிலோ 33 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.தமிழ் புத்தாண்டையொட்டி, கடந்த வாரம் வெண்டைக்காய் அதிகளவு கொள்முதல் செய்யப்பட்டதால், கிலோ 40 ரூபாய்க்கு விற்றது. தற்போது கொள்முதல் குறைந்ததால் அதன் விலை சரிந்து, கிலோ 12 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.