உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பெரும்பாலான பள்ளிகளில் மைதானங்கள் இல்லை ; உடற்கல்வி ஆசிரியர் இல்லாமலும் மாணவர்கள் அவதி

பெரும்பாலான பள்ளிகளில் மைதானங்கள் இல்லை ; உடற்கல்வி ஆசிரியர் இல்லாமலும் மாணவர்கள் அவதி

மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை.அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அவசிய தேவைகளான காற்றோட்டத்துடன் கூடிய வகுப்பறை, நுாலகம், ஆய்வகம், விளையாட்டு மைதானம், கழிப்பறை போன்றவற்றை ஏற்படுத்தி தர வேண்டியது அவசியமானதாகும். இன்றைய இளம் தலைமுறை நல் வழிகாட்டுதலோடு வளர்க்கப்பட்டால் மட்டுமே எதிர்கால தேசம் சிறக்கும். தற்போதைய அலைபேசி யுகத்தில் மாணவர்களின் உடல் உழைப்பு செயல்பாடுகள் வெகுவாக குறைந்து விட்டது. இதை நிவர்த்தி செய்து மாணவர்களின் உடல் நலம் , மன நலனை மேம்படுத்திட முதற்கட்டமாக விளையாட்டுகளில் அனைத்து மாணவர்களையும் ஈடுபடுத்த வேண்டும். இந்த முயற்சிகள் வெற்றியடைய விளையாட்டு மைதானங்களும், உடற்கல்வி ஆசிரியர்களும் இன்றியமையாத தேவையாகும்.அரசின் சார்பில் விளையாட்டு துறையை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்த போவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், ஆத்துார் சட்டப் தொகுதிகளில் ரூ.66 கோடி மதிப்பீட்டில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். அதனுடன் அனைத்து அரசு பள்ளிகளிலும் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் விளையாட்டு மைதானங்கள், உடற்கல்வி ஆசிரியர்களை நியமித்து மாணவர்களின் விளையாட்டு திறனை வெளிக்கொணர வழிவகை செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ram pollachi
நவ 10, 2024 10:40

அடர்ந்த குடியிருப்பு பகுதியில் வீட்டை இடித்து உள் விளையாட்டு அரங்கம் அமைத்து இஷ்டம் போல் பண வசூல் செய்வது அதிகரித்து விட்டது. வார இறுதி நாளில் நள்ளிரவு நேரத்தில் மக்கள் நிம்மதியாக தூங்க முடியாது.


Anbil
நவ 10, 2024 06:46

Come to Srirangam. The school children of Dr Rajan Middle School run by Tiruchirapalli Municipal Corporation are using East Chithirai Street as their play ground during their physical training classes. Even though vacant ground belonging to District Judiciary which is located next to school building is being used for cattle breeding by street dogs. The irony is that the State Education Minister belongs to this district. This is called Dravida Model governance


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை