மேலும் செய்திகள்
வல்லனி புனித அன்னை தெரசா சர்ச் திருவிழா தேர்பவனி
19-May-2025
திண்டுக்கல்: திண்டுக்கல் லைன் தெரு அன்னை ஆரோக்கிய மாதா சர்ச் ஆண்டு திருவிழா பகல் தேர் பவனிநடந்தது.திண்டுக்கல் லைன் தெரு அன்னை ஆரோக்கிய மாதா சர்ச் ஆண்டு திருவிழா மே 23 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 24 ம் தேதி இரவு ஆரோக்கிய மாதா, செபஸ்தியார், சவேரியார், திருஇருதய ஆண்டவர், புனித பிலோமினம்மாள் உள்ளிட்ட ஐந்து சுரூபங்கள் தாங்கிய மின் தேர் பவனி நடைபெற்றது. நேற்று அன்னை ஆரோக்கிய மாதா பகல் சப்பரபவனி நடைபெற்றது. மூன்று அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அன்னை ஆரோக்கிய மாதா, திரு இருதய ஆண்டவர், செபஸ்தியார் உள்ளிட்ட சுரூபங்கள் தாங்கிய பகல் சப்பரபவனி நடைபெற்றது. பவனி லைன் தெரு வீதிகள், பழநி ரோடு, அரசமர வீதி, கச்சேரி தெரு உள்ளிட்ட பகுதிகளின் வழியாக சென்றது. சர்சிற்கு சப்பரம் வந்ததும் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெற்றது.
19-May-2025