உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குறைதீர் கூட்டத்தில் 2 குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி

குறைதீர் கூட்டத்தில் 2 குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த குறைதீர் கூட்டத்தில் உறவினர்கள் மிரட்டல் விடுப்பதாக கூறி தனது 2 குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயன்றார்.கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்தஇக்கூட்டத்தில் 319 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா, உதவி ஆணையாளர்(கலால்) பால்பாண்டி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலர் மாரி, ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலர் முருகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கோட்டைக்குமார், முருகன், தனித்துணை ஆட்சியர்கங்காதேவி கலந்துகொண்டனர். தொடர்ந்து 39 பயனாளிகளுக்கு ரூ.8.32 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பூங்கொடி வழங்கினார்.தீக்குளிக்க முயற்சிவடமதுரையை அடுத்த ரெட்டியபட்டியை சேர்ந்த நல்லம்மாள் 35,தனது 11 வயது மகன், 14 வயது மகளுடன் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்தனர். விசாரணையில், கட்டட தொழிலாளியான நல்லம்மாளின் கணவர் விபத்தில் இறந்த நிலையில் கட்டட வேலைக்கு பயன்படுத்தும் உபகரணங்கள், மோட்டார் சைக்கிள் உறவினர்கள் சிலர் அபகரித்துவிட்டனர் . திருப்பி கேட்ட போது தர மறுத்ததுடன் நல்லம்மாள் குடும்பத்தினரை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு கொடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்பதற்காக குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி