உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி

மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி

சாணார்பட்டி: செங்குறிச்சி எஸ்.குரும்பபட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவில் நடந்த முளைப்பாரி ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இக்கோயில் விழா ஏப்.15 சுவாமி சாட்டுதளுடன் தொடங்கியதை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேகம் , சிறப்பு அலங்காரம் நடந்தது. ஏப்.23 அதிகாலை அம்மன் வான வேடிக்கையுடன் பவனி வருதல், மாவிளக்கு, தீச்சட்டி, பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர். நேற்று மஞ்சள் நீராட்டம், முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடந்தது. சுற்று கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை