உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பா.ஜ., கவுன்சிலரை மிரட்டிய நகராட்சி தலைவர் ;ஆடியோ வைரல்

பா.ஜ., கவுன்சிலரை மிரட்டிய நகராட்சி தலைவர் ;ஆடியோ வைரல்

பழநி : பழநி நகராட்சி பா.ஜ., கவுன்சிலரை தி.மு.க.,வை சேர்ந்த நகராட்சி தலைவர் மிரட்டிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பழநி நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி பா.ஜ., கவுன்சிலர் பரமேஸ்வரியுடன் அலைபேசியில் பேசும் உரையாடல் ஒன்று வைரலாகிறது . அதில் இவர்கள் பேசியதாவது : நகராட்சி தலைவர்: உன் பெயர் பரமேஸ்வரியா. மார்க்கண்டேயன் கோயில் சந்து ரங்கநாதன் சந்துக்களில் லோன் வாங்கி தருவதாக சொல்கிறீர்களா .எங்களுக்கும் லோன் தேவைப்படுகிறது. கவுன்சிலர் : நகராட்சியில் உள்ள சிவக்குமார் சார் மூலம் லோன் பெற்று தருகிறேன். நகராட்சி தலைவர் :சிவக்குமார் எந்த அரசின் கீழ் சம்பளம் வாங்கி பணி புரிகிறார். பி.ஜே.,பிக்கு வேலை பார்த்து வருகிறாயா. கவுன்சிலர்: நான் பி.ஜே.பி., யில் உறுப்பினராக உள்ளேன். நகராட்சி தலைவர்: பி.ஜே.பி.,யில் இருக்கிறாய். சிவகுமாருக்கு எந்த ஆட்சி சம்பளம் தருகிறது. இதை ரெக்கார்ட் செய்து கொள்ளவும். எங்கள் பகுதியில் லோன் வாங்கி தருவதாக கூறி உள்ள நீ அனைவருக்கும் லோன் வாங்கி தர வேண்டும். இல்லையெனில் அத்தனை பேரும் உங்கள் உன் வீட்டில் வந்து அமர்ந்து கொள்ள சொல்வேன். கவுன்சிலர் : சிவக்குமார் சார் தான் லோன் வாங்கி தருகிறார். நகராட்சி தலைவர்: அவர் எங்கே இருந்து வாங்கி தருகிறார். அவர் வீட்டிலிருந்து தருகிறாரா. கவுன்சிலர்: பேங்கில் இருந்து வாங்கி தருகிறார் மேடம். நகராட்சி தலைவர்: சிவகுமார் எந்த ஆட்சியின் கீழ் வேலை செய்கிறார். பி.ஜே.பி., கவர்மென்ட்க்கு வேலை செய்கிறாரா, தி.மு.க., கவர்மெட்க்கு வேலை செய்கிறாரா, கவுன்சிலர் : நான் பி.ஜே.பி.,க்காக சொல்லவில்லை மேடம், நகராட்சி தலைவர்: நீ பி.ஜே.பி.,க்காக தான் சொல்லி இருக்கிறாய். இனி தெருவுக்குள் வந்தால், கட்டி வைத்து விடுவேன். எழுதி வைத்துக்கொள். இவ்வாறு உரையாடல் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ