உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை ஏரியில் செப்டிக் டேங்க் கழிவு கண்டுகொள்ளாத நகராட்சி

கொடை ஏரியில் செப்டிக் டேங்க் கழிவு கண்டுகொள்ளாத நகராட்சி

கொடைக்கானல் : கொடைக்கானல் ஏரிச்சாலையில் உள்ள கழிப்பறை செப்டிக் டேங்க் நிறைந்து ஏரியில் கலப்பதால் ஏரி மாசடைந்துள்ளது.செவன் டீ அருகே நகராட்சி சமுதாய கழிப்பறை கட்டமைத்துள்ளது. இவை செயல்பாட்டிற்கு வந்த நாள் முதலே செப்டிக் டேங்க் விரைவில் நிறைந்து துர்நாற்றம் வீசுவது குறித்து சர்ச்சை எழுந்து வருகிறது. கட்டண கழிப்பறையாக செயல்பட்ட போதும் பராமரிப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. சில வாரமாக செப்டிக் டேங்க் நிறைந்து கழிவு நீர் கலப்பதால் ஏரி மாசடைந்து வருகிறது. பயணிகள் புகார் அளித்தும் நகராட்சி நடவடிக்கை இல்லை. தொடரும் அவலத்தால் பயணிகள் முகம் சுளிக்கின்றனர். நகராட்சி இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏரியை சுற்றி 200 மீட்டர் தொலைவிற்கு கட்டுமானங்கள் ஏற்படுத்த தடை உள்ள நிலையில் இவ்விதிமுறை காற்றில் விடப்பட்டுள்ளது. ஏரியை சுற்றி சுற்றுலா பயணிகளுக்காக கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி பயோ செப்டிக் டேங்க் வசதியை ஏற்படுத்தப்பட்ட போதும் குறைந்த கொள்கலன் வசதியுடன் அமைத்துள்ளதால் இவை விரைவில் நிறைந்து பிரச்னைக்கு காரணமாக உள்ளது. ஏரியிலிருந்து 10 மீட்டருக்கு அருகில் கழிப்பறைகள் அமைந்துள்ளதால் கழிவு நீர் ஏரியில் எளிதில் கலந்து மாசடைகிறது.நகராட்சி ஏரிச்சாலையில் கட்டுமான விதிகளை ஒழுங்குப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை