உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அகற்றலாமே: ரோட்டோரங்களில் இருக்கும் ராட்சத பேனர்கள்: உள்ளாட்சிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்

அகற்றலாமே: ரோட்டோரங்களில் இருக்கும் ராட்சத பேனர்கள்: உள்ளாட்சிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்

பழநி: திண்டுக்கல் மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளிலிருக்கும் ராட்சத விளம்பர பேனர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும். மாவட்டத்தில் தமிழகத்தின் பகுதிகளை முக்கிய நகரங்களுடன் இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் உள்ளன. இதன் ரோட்டோரங்களிலும் பஸ் ஸ்டாண்ட்,பஸ் ஸ்டாப்களில் பேனர்கள் அமைப்பது அதிகரிக்கின்றன. முக்கிய பகுதிகளில் அரசியல் கட்சியினரும் பேனர்களை அமைப்பது அதிகரித்துள்ளது. கடைகளின் பிளக்ஸ் போர்டுகள், கட்டடங்களின் முகப்பு பகுதிகள், ரோட்டில் வைக்கப்படும் விளம்பரத் தட்டிகள் போன்றவை ரோடுகளில் செல்வோர், வாகன ஓட்டுநர்களின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் உள்ளது. இதனால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. சில ஹோட்டல்கள்,ரோடுகளில் செல்லும் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் நடைபாதைகளில் சிறு தட்டிகளை வைத்து சிரமத்தை ஏற்படுத்துகின்றனர். பேனர்களை அமைக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த போதிலும் நகர,புறநகர் பகுதிகளில் அதிகரித்து தான் வருகிறது. இதனை கட்டுப்படுத்த உள்ளாட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.........வாகனஓட்டிகள் சிரமம்ரோட்டோரங்களில் அமைக்கப்படும் பேனர்களால் கவன குறைவு ஏற்படுகிறது. இதனால் வாகனம் ஓட்டும்போது சிரமம் ஏற்படுகிறது. விழா நடைபெற்றால் நிறைவு பெறுவதற்கு முன்பு ஒரு நாள், நடக்கும் நாள் என 3 நாட்கள் மட்டும் பேனர்கள் வைக்க அனுமதிக்க வேண்டும். ஒரு வாரத்திற்கும் மேல் அகற்றாமல் இருப்பது பேனர்கள் வைக்கும் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதனால் விபத்து ஏற்படுகிறது. மழையில் சரிந்து விடும் சூழல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டுனர்கள் சிரமம் அடைகின்றனர்.கார்த்திகேயன்,ஒப்பந்ததாரர்,பழநி. ......................................


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ