உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திருச்சி சிவாவுக்கு எதிராக நாடார் பேரவை போஸ்டர்

திருச்சி சிவாவுக்கு எதிராக நாடார் பேரவை போஸ்டர்

பட்டிவீரன்பட்டி: முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்து தி.மு.க., எம்.பி., திருச்சி சிவா பேசிய வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இது சம்பந்தமாக காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். சிவாவும் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இருப்பினும் திருச்சி சிவாவிற்கு எதிராக கண்டனம் தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டுவது தொடர்கிறது. பட்டிவீரன்பட்டி சவுந்தர பாண்டிய நாடார் இளைஞர் பேரவை சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் காமராஜரை அவதூறாக பேசிய திருச்சி சிவாவை கண்டிக்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை