நல்லநாயக்கன்பட்டி ரோடு விரைவில் சீரமைப்பு: எம்.எல்.ஏ.,
வேடசந்துார்: வேடசந்துார் தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜன் அறிக்கை: இ.சித்துார் ஊராட்சி நல்லமநாயக்கன் பட்டியிலிருந்து வேடசந்தூர் எரியோடு ரோட்டில் சேரும் இணைப்பு சாலை 1.60 கி.மீ., நீளம் கொண்டது. இந்த ரோட்டை புதுப்பிக்க, அன்றைய அ.தி.மு.க., அரசால் 2019 ல் ஒப்புதல் வழங்கப்பட்டு 2020 ல் ரூ. 31 லட்சம் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளது. 2021ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், தி.மு.க., வேட்பாளராக நான் பிரசாரத்திற்கு சென்ற போதே இந்த ரோடு மிக மோசமாக சேதமடைந்திருந்தது. இந்த ரோட்டை புதுப்பித்து தர இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். புதிதாக ரோடு அமைக்கப்பட்டால் 5 ஆண்டு காலம் முடிந்த பிறகு தான் ரோடை புதியதாக அமைக்க முடியும். இதற்காக காத்திருந்து ஒன்றிய சாலையை எனது தனிப்பட்ட முயற்சியால் நெடுஞ்சாலை த்துறைக்கு மாற்றி உள்ளேன். தற்போது ரூ.ஒரு கோடியே 39 லட்சம் திட்ட மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கப்பட உள்ளது. இதோடு இப்பகுதி மக்களின் நலன் கருதி 60 ஆயிரம் லிட்டர் குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.