மேலும் செய்திகள்
நத்தம், வடமதுரை கோயில்களில் கும்பாபிஷேகம்
23 minutes ago
மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல்
24 minutes ago
கொடை யில் அடர் பனிமூட்டத்துடன் சாரல் மழை
24 minutes ago
பழநியில் கூட்டம்
24 minutes ago
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் நாசிக் முருங்கைக்காய் கிலோ ரூ. 370 க்கு விற்பனை ஆனது. ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையம், அப்பியம்பட்டி, இடையகோட்டை, மார்க்கம்பட்டி,, கள்ளிமந்தையம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் முருங்கைக்காய் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. பல இடங்களில் முருங்கை அறுவடை முடியும் தருவாயில் இருப்பதால் மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. நேற்று கரும்பு முருங்கை கிலோவுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.350 க்கு விற்பனை ஆனது. செடி முருங்கை கிலோவுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.320 க்கும், கிலோ ரூ.270 க்கு விற்ற மரம் முருங்கை ரூ.300 க்கும் விற்பனை ஆனது. பற்றாக்குறையை போக்க நாசிக் பகுதியில் விளைந்த முருங்கைக்காய் இங்கு லாரிகளில் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. நேற்று ஒரு கிலோ நாசிக் முருங்கைக்காய் ரூ. 370 க்கு விற்பனையானது. இனி வரும் நாட்களில் வரத்து குறையும் வாய்ப்புள்ளதால் முருங்கை விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
23 minutes ago
24 minutes ago
24 minutes ago
24 minutes ago