உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நாசிக் முருங்கைக்காய் கிலோ ரூ.340க்கு விற்பனை

நாசிக் முருங்கைக்காய் கிலோ ரூ.340க்கு விற்பனை

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கை விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் நாசிக் முருங்கை கிலோ ரூ.340 க்கு விற்பனையானது.ஒட்டன்சத்திரம் சுற்றியகிராம பகுதிகளில் செடி ,கரும்பு முருங்கைக்காய் அதிகமாக பயிரிடப்பட்டு வருகிறது. அவ்வப்போது பெய்த மழை காரணமாக முருங்கைக்காயில் கரும்புள்ளிகள் தோன்றி தரம் குறைந்ததாக மாறியது. மேலும் இப்பகுதியில் சீசன் முடியும் தருவாயில் இருப்பதால் மார்க்கெட்டிற்கு முருங்கை வரத்து மிகவும் குறைந்து போனது. உள்ளூர் கரும்பு முருங்கை கிலோ ரூ.180, செடி முருங்கை ரூ.150க்கு விற்பனையானது.மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் விளையும் முருங்கைக்காய் தரமாக இருப்பதால் அங்கிருந்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. கிலோ ரூ.340க்கு விற்பனையாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை