உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நத்தம் வர்த்தகர்கள் சங்க கூட்டம்-

நத்தம் வர்த்தகர்கள் சங்க கூட்டம்-

நத்தம்: -நத்தம் தனியார் திருமண மண்டபத்தில் நத்தம் வர்த்தகர்கள் சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. சங்க தலைவர் சேக்ஒலி தலைமை வகித்தார். செயலாளர் ஜெரால்டுராஜா, பொருளாளர் அமானுல்லா,சங்க சட்ட ஆலோசகர் சேக் சிக்கந்தர் பாட்ஷா முன்னிலை வகித்தனர்.துணைத் தலைவர் செந்தில்ராஜன் வரவேற்றார். நத்தம் ரவுண்டானா முதல் கோவில்பட்டி, பள்ளபட்டி வரை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறையில் மனு அளிப்பது, நத்தம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் வேண்டி அரசுக்கு மனு கொடுப்பது உட்பட 4 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. துணைச்செயலாளர் அன்புராஜா கலந்துகொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி