தேசிய வாக்காளர் தின வினாடி வினா இடையகோட்டை மாணவிகள் வெற்றி
இடையகோட்டை: திண்டுக்கல்லில் நடந்த தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு மாவட்ட வினாடி வினா போட்டியில் இடையகோட்டை நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.இடையகோட்டை நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவி மோகனப்பிரியா 11ம் வகுப்பு மாணவி நந்தினி ஆகியோர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு வினாடி வினா போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதன் மாணவிகள், பயிற்சி ஆசிரியர் இளங்கோ ஆகியோரை தலைமை ஆசிரியர் ஜான்வில்பர் பொன்ராஜ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முகமது இஸ்மாயில், ஊராட்சி தலைவர் சரவணன் ,ஒன்றிய கவுன்சிலர்கள் ஜென்சி, செல்வி, பெற்றோர் , ஆசிரியர்கள் பாராட்டினர்.