இயற்கை மருத்துவ தினம்
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் யோகா,இயற்கை மருத்துவ வாழ்வியல் மையத்தில் சர்வதேச இயற்கை மருத்துவ தினம் நடந்தது. மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்டாக்டர் சிவகுமார் தலைமை வகித்தார். யோகா பிரிவு உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் வசந்தகுமார் வரவேற்றார்.சித்த மருத்துவர் பேச்சி, ஆயுர்வேத மருத்துவர் காமாட்சி,யுனானி மருத்துவ இக்ரமுல்லா முன்னிலை வகித்தனர். யோகா உதவியாளர் ரத்தினப்பாண்டியன் நன்றி கூறினார்.