உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வசதிகளில் புறக்கணிப்பு; நல்லமநாயக்கன்பட்டி மக்கள் அவதி

வசதிகளில் புறக்கணிப்பு; நல்லமநாயக்கன்பட்டி மக்கள் அவதி

எரியோடு: நல்லமநாயக்கன்பட்டிக்கான ரோடு சேதம், பஸ் வசதி நிறுத்தம் எவ வசதிகளில் நல்லமநாயக்கன்பட்டி புறக்கணிக்கப்படுவதால் மக்கள் பரிதவிக்கின்றனர்.எரியோடு அருகில் இ.சித்துார் ஊராட்சியில் கிழக்கு பகுதியில் கடைசி கிராமமாக இருப்பது நல்லமநாயக்கன்பட்டி. இக்கிராமத்தை வடமதுரை ஒட்டன்சத்திரம் ரோட்டுடன் இணைக்கும் 2 கி.மீ., துார ரோடு சேதமடைந்து கிடக்கிறது. இந்த ரோட்டின் பெரும்பகுதி பேரூராட்சி பராமரிப்பிலும், எஞ்சிய குறைந்த துாரம் வேடசந்துார் ஒன்றிய பகுதிக்குள் இருப்பதால் முறையாக பராமரிப்பின்றி உள்ளது. அதோடு கிராமத்தில் பல தெருக்களில் கழிவு நீர் முறையாக வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. கொரோனா தொற்று பிரச்னைக்கு முன்னர் இந்த கிராமம் வழியே இயக்கப்பட்ட பஸ் சேவை தற்போது இல்லாததால் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர். திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் முறையாக செய்யப்படாததால் ரோடு ஓரங்களில் ஆங்காங்கே குப்பை தேங்கி உள்ளன.

-சேதம் ரோடால் அவதி

எம்.ஜெயக்குமார், பா.ஜ., ஊடக பிரிவு மாவட்ட செயலாளர்: எரியோடு அரசு பள்ளி மாணவர்கள் நல்லமநாயக்கன்பட்டியில் இருந்து 2 கி.மீ., துாரத்தில் இருந்து வடமதுரை ஒட்டன்சத்திரம் ரோடு சென் பள்ளிக்கு செல்ல வேண்டும். இந்த ரோட்டின் பெரும்பகுதி எரியோடு பேரூராட்சி பகுதிக்குள் உள்ளது. இங்கு சில ஆண்டுகளுக்கு முன் தரமற்றதாக அமைக்கப்பட்ட ரோடு தற்போது சேதமடைந்து மக்களை அவதிக்குள்ளாக்கி வருகிறது.

-செயல்படாத நுாலகம்

கே.முத்துச்சாமி, வேடசந்துார் கிழக்கு ஒன்றிய பா.ஜ., செயலாளர்: கொரோனா தொற்று பிரச்னைக்கு முன்னர் திண்டுக்கல்லில் இருந்து தொட்டணம்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, எரியோடு வழியே குண்டாம்பட்டி வரை அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. தற்போது இந்த பஸ் நிறுத்தப்பட்டுள்ளதால் சிரமமாக உள்ளது. நல்லமநாயக்கன்பட்டியில் துவங்கப்பட்ட நுாலகம் செயல்படாமல் உள்ளதால் இளைஞர்கள் பாதிக்கின்றனர்.

-கொசு உற்பத்தி

கே.நாகராஜன், ஆர்.ஓ., மெக்கானிக்: கழிவு நீர் முறையாக வெளியேற முடியாத நிலை உள்ளது. கொசு உற்பத்தி அதிகரிப்பதுடன் வாகனங்கள் செல்லும் போது சகதி தெறிக்கும் பிரச்னை உள்ளது. திண்டுக்கல் கரூர் ரயில் பாதை அமைக்கப்பட்டபோது 'சப் வே அமைக்கப்படாமல் துண்டிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் 'சப் வே' அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி