உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  புதிய பஸ் துவக்க விழா

 புதிய பஸ் துவக்க விழா

வேடசந்துார்: வேடசந்துாரிலிருந்து சீத்தமரம் நால்ரோடு, கோடாங்கிபட்டி, புளியமரத்துக்கோட்டை வழியாக காசிபாளையம் சென்று மீண்டும் அதே வழித்தடத்தில் வேடசந்துாருக்கு அரசு பஸ் ஒன்று சென்று வருகிறது. இந்த பஸ் சேதமடைந்த நிலையில் பள்ளி மாணவர்கள் , பொதுமக்கள் நலன் கருதி இதே வழித்தடத்தில் புதிய பஸ் துவக்க விழா காசிபாளையத்தில் நடந்தது. வேடசந்துார் தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜன் துவக்கி வைத்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் கவிதா, பேரூர் செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், தி.மு.க., நிர்வாகிகள் கவிதாமுருகன், மாரிமுத்து, பூலோகம், செல்வம், முன்னாள் ஊராட்சி தலைவர் அய்யாத்துரை பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை