உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / செய்தி சிலவரிகளில்...

செய்தி சிலவரிகளில்...

ஆக்கிரமிப்புகள் அகற்றம்திண்டுக்கல்:திண்டுக்கல் சந்தைப்பேட்டை ரோடு,நாகல்நகர் பாரதிபுரம் டிப்போ ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவில் செயற்பொறியாளர்கள் சுப்பிரமணியன், நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். குடிநீர் இணைப்பு துண்டிப்புதிண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் குடிநீர் இணைப்புகளுக்கான வரி அதிகமானோர் செலுத்தாமல் இருந்தனர். வரி செலுத்தாமலிருப்பவர்களின் குடிநீர் இணைப்புகளை துண்டிக்க மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். மாநகராட்சி அதிகாரிகள் நாகல்நகர்,பாரதிபுரம்,வடக்கு காளியம்மன் கோயில் தெரு,மரியாநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் செலுத்தாமலிருந்த 15 வீடுகளின் குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர்.ஆலோசனை கூட்டம்திண்டுக்கல்:திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை சார்பில் ஜி.டி.என்.,கலை அறிவியல் கல்லுாரியில் போதைப்பொருள் தடுப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி,பாதுகாப்பு அலுவலர் செல்வம்,ஜி.டி.என்.,கல்லுாரி முதல்வர் பாலகுருசாமி,போலீசார் பங்கேற்றனர்.பயிற்சி கருத்தரங்கம்திண்டுக்கல்: திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை,சுற்றுச்சூழல் துறை சார்பில் மாணவர்களுக்கு பயிற்சி கருத்தரங்கம் நடந்தது. கல்வி அலுவலர் நாசருதீன்,மாவட்ட கல்வி அலுவலர் சுதாகர்,மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் திவ்யா,முத்துச்சாமி,கருத்துரையாளர்கள் சதாசிவம், தொழில் நுட்ப வல்லுநர் சரவணன், வேதியலாளர் கெவின்,மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஹரிகரசுதன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி