டாஸ்மாக் வேண்டாம்: எதிர்ப்பு மறியல்
வேடசந்துார், : பாலப்பட்டி ஊராட்சி அழகாபுரியில் செயல்பட்ட அரசு டாஸ்மாக் கடையை புதுஅழகாபுரி கோல்டன் நகருக்கு இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஊர் மக்கள் கருப்புக்கொடி ஏந்தி அழகாபுரி வேடசந்துார் ரோட்டில் மறியல் ஈடுபட முயற்சித்தனர். அங்குவந்த ற கூம்பூர் எஸ்.ஐ., பாண்டியன் தலைமையிலான போலீசார் ரோடு மறியலை தடுத்து நிறுத்திய நிலையில் போராட்ட காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதாக எச்சரித்து அனுப்பினார்.